kirthigai

ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

கார்த்திகை தீபத்திருவிழா..திருவண்ணாமலை

உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 24ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து வரும் 23, 24, 25 ஆம் தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் அன்றைய தினம் நண்பகல் 11.40 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். அந்த வகையில் கார்த்திகை தீபத்திற்கான பிரசித்தி பெற்ற தலமாக அண்ணாமலையார் கோயில் திகழ்கிறது. தற்போது கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் வரும் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறவுள்ளது.
அதிகாலை நான்கு மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும்,
மாலை கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்தாண்டு முதல்முறையாக இந்து சமய அறநிலை துறை சார்பில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கான 3 ஆயிரம் இலவச டிக்கெட்களை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் 500 நுழைவு சீட்டுகள் பதிவு செய்து கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த 500 பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மகா தீபத்தினை காண திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் 1000 பேர் முன்பதிவு செய்து கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 1000 பேர் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் நுழைவு சீட்டு பெற முன்பதிவு செய்யக்கூடிய பக்தர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அதிகாரபூர்வமான இணையதளமான http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற முகவரியில் வரும் நவம்பர் 20ஆம் தேதி மாலை 3 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். வருகிற 20 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்களை கணினி மூலம் தானியங்கி குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read More