deliveryboy

tamilnaduசினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

டெலிவரி பாய் (Delivery Boy) – தமிழ் திரைப்பட விமர்சனம்..

Actors:-லியோ சிவகுமார், ராதிகா சரத்குமார், பிரிகிடா சாகா, காளி வெங்கட், போஸ் வெங்கட்
இயக்கம்: நானி தர்லா
இசை: சுந்தரமூர்த்தி K.S.
வகை: ஆக்‌ஷன் – எமோஷனல் டிராமா
வெளியீடு: 27 நவம்பர் 2026
நேரம்: சுமார் 2 மணி 4 நிமிடங்கள்.
கதை
ஒரு சாதாரண உணவு டெலிவரி செய்யும் இளைஞன்தான் கதையின் நாயகன்.
அவனுக்குச் சிறுவயது முதலே போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. ஆனால் எதிர்பாராத விதமாக அவனது தாயாருக்குப் பெரிய விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகிறது.
தாயின் மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்படுவதால், வேறு வழியில்லாமல் ஒரு திருட்டில் ஈடுபடுகிறான்.
சில மாதங்களுக்குப் பிறகு, அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கொலைக் குற்றத்தில் தவறாகச் சிக்க வைக்கப்படுகிறார்.
அந்த நபரைக் காப்பாற்ற நாயகன் என்ன செய்கிறான்? தனது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பணயம் வைத்து எப்படி உண்மையை வெளிக்கொண்டு வருகிறான் என்பதுதான் மீதிக்கதை.
படத்தின் பிளஸ் பாயிண்ட்ஸ்
லியோ சிவகுமார்: சாதாரண டெலிவரி பாயாகவும், உணர்ச்சிகரமான இளைஞனாகவும் நடித்திருப்பது படத்தின் முக்கிய பலம்.
ராதிகா சரத்குமார்: அம்மா கதாபாத்திரத்தில் உணர்ச்சிபூர்வமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
காளி வெங்கட்: கதைக்கு இயல்பான நடிப்பால் பலம் சேர்க்கிறார்.
கதை: மனிதநேயம் மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை என்ற நல்ல கருத்து.
இசை: சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு உதவுகிறது.
டெலிவரி பாய் – மனிதநேயத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிகரமான ஆக்‌ஷன் டிராமா.
அம்மா சென்டிமென்ட், சமூக அக்கறை, குற்றப் பின்னணி கொண்ட கதைகளை விரும்புபவர்கள் பார்க்கலாம்.
இப்போது வரும் படங்களில் ஹீரோ ஒரே படத்தில் எல்லாவற்றையும், லவ் செண்டிமெண்ட், தாய்ப்பாசம், வீரவசனம், காண்பிக்க முயல்வது தான் பிரச்னை …
சினிமா என்றல் லாஜிக் பார்க்க கூடாது என்பார்கள் ஆனால் இந்த படத்தில் லாஜிக் நிறைய இடங்களில் மிஸ்ஸிங்…
கடன் வாங்கிய இருவரும் கடன் கொடுத்தவரை தேடி தேடி அலைவது…
ஹீரோ எந்த weapons இல்லாமல் அந்த ஐந்து பேரையும் கையால் அடிப்பது..
இடைவேளைக்கு பிறகு கதாநாயகி மிஸ்ஸிங்…
முடிவில் அவர்கள் கல்யாண போட்டோ ஆவது காணப்பித்திருக்கலாம்…
விஜயகாந்த் மாதிரி fight இருக்கனும், விஜயகாந்த் மாதிரி கிளைமாக்ஸ் வசனம் பேசணும் என்று நினைப்பது ….
டெலிவரி பாய் சரியாக டெலிவரி ஆகல …(kk )

Read More