Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

தேர்தல் NDA பிரச்சாரம்-மோடி தமிழகம் வருகை…

தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஈபிஎஸ், அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
பிரதமரின் வருகையை ஒட்டி செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்து ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஆட்சியர் சினேகா அறிவுறுத்தியுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மட்டும் வழக்கம்போல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இன்று மோடி தலைமையில் பா.ஜ.க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இதில் மோடியுடன் எந்தெந்த கட்சிகள் மேடையை பகிர்ந்து கொள்ள உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஆளும் கட்சியான தி.மு.க முதல் தற்போது தொடங்கப்பட்டுள்ள த.வெ.க வரை தீவிரமான களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இன்று பிரச்சாரம் செய்கிறார். முதலில் திருவனந்தபுரத்திற்கு செல்லும் மோடி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மூன்று புதிய ‘அம்ரித் பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
தொடர்ந்து, அங்கு பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் சென்னை செங்கல்பட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியான அ.தி.மு.க உட்பட ஆறு கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்வார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்த அணியான டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. தமிழ்நாடு பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் தலைமையில் டிடிவி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பியூஷ் கோயல் மற்ற கூட்டணி கட்சிகளான 4 கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்.

அதன்படி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜகன் மூர்த்தி மற்றும் வாசன் ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து, பா.ஜ.க-வுக்கு ஆலோசனை வழங்கும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் எஸ். குருமூர்த்தியையும், பட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசையும் கோயல் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி மற்றும் வாசன் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்த அவர் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இது, “இரட்டை இயந்திர வளர்ச்சி” என்ற பா.ஜ.க-வின் பரந்த தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நடைபெறும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, பா.ம.க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

திருப்போரூர் கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான இடங்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்​றி, 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென, அறநிலை​யத்​துறை மற்​றும் வரு​வாய் துறைக்கு கெடு விதி்த்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, வழக்​கறிஞர் பி. ஜெகந்​நாத் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘செங்​கல்​பட்டு மாவட்​டம், திருப்​போரூரில் உள்ள கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்​புள்ள 2 ஆயிரம் ஏக்​கர் சொத்​துக்​களில், 550 ஏக்​கருக்​கும் மேற்​பட்ட சொத்​துக்​களை தனி நபர்​கள் ஆக்​கிரமித்​துள்​ளனர்.
எனவே, கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான சொத்​துக்​களை வரு​வாய்​துறை அதி​காரி​கள் மூல​மாக அளவீடு செய்​து, ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற அறநிலை​யத் துறை மற்​றும் தமிழக அரசின் வரு​வாய்த் துறை செயலருக்கு உத்​தர​விட வேண்​டும்’ என, கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​க​னவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், 2022 மே மாதத்​துக்​குள் ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டுமென உத்​தர​விட்​டிருந்​தது. ஆனால், உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின் அடிப்​படை​யில், ஆக்​கிரமிப்​பு​களை அகற்​ற​வில்லை எனக் கூறி, வழக்​கறிஞர் ஜெகந்​நாத் உயர் நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.
இந்த வழக்​கு, தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், இ்ந்த அவம​திப்பு வழக்கு கடந்த ஓராண்​டுக்​கும் மேலாக நிலு​வை​யில் இருந்து வரு​கிறது. இன்​னும் அறிக்கை தாக்​கல் செய்​யாமல் இருப்​பது ஏன் என கேள்வி எழுப்​பினர்.

நீதிபதிகள் அதிருப்தி: அதற்​கு, அறநிலை​யத் துறை தரப்​பி்ல் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்​.ஆர்​.ஆர்​. அருண் நடராஜன், கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான 125 ஏக்​கர் நிலத்தை 233 பேர் ஆக்​கிரமித்து இருப்​பது ஆய்​வில் கண்​டறியப்​பட்​டுள்​ளது. இவர்​களை அந்த நிலத்​தில் இருந்து சட்ட ரீதி​யாக அப்​புறப்​படுத்​து​வதற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.
சிலர் வாடகை செலுத்த முன் வந்​துள்​ளனர். எனவே, ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்றி அறிக்கை தாக்​கல் செய்ய 3 வாரம் அவகாசம் வழங்க வேண்​டும் என, கோரி​னார்.

இதையடுத்து நீதிப​தி​கள், அவம​திப்பு வழக்கு நிலு​வை​யில் இருக்​கும் போது, கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான சொத்​துக்​களை அபகரித்து ஆண்​டுக்​கணக்​கில் அனுப​வித்து வரும் ஆக்​கிரமிப்​பாளர்​களை எப்​படி வரன்​முறைப்​படுத்த முடி​யும் என அதிருப்தி தெரி​வித்​தனர்.

பின்​னர், இந்த வழக்​கில் ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்றி 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென அறநிலை​யத் துறைக்​கும், வரு​வாய் துறை​யினருக்​கும் கெடு வி​தித்​து வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​தனர்​.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஜன.23 மோடி தமிழகம் வருகை

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தையை ஒதுக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், மோடி சாலை பயணத்தை தவிர்த்து முற்றிலும் சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே பயணிக்க உள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 1:15 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்படும் மோடி மதியம் 2:15 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் பழைய முனையத்தை வந்தடைவார்.
பின்னர் மதியம் 2.25 மணிக்கு சிறப்பு ஹெலிகாப்டரில் ஏறி பிற்பகல் 3 மணிக்கு நேரடியாக மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார். இந்த பொதுக் கூட்டம் மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டு உரையற்றுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி மாலை 4:30 மணிக்கு மதுராந்தகத்தில் இருந்து அதே ஹலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் திரும்புவார். அங்கிருந்து மாலை 5:05 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்வார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சிறப்பு பாதுகாப்புக் குழுவின் (SPG) குழு ஒன்று சென்னை வந்தது. நேற்று (ஜன.20) காலை, பழைய சென்னை விமான நிலைய முனையத்தில் சிறப்பு குழு பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தை நடத்தியது.
பிரதமரின் சிறப்பு விமானங்களுக்கான பார்க்கிங் பகுதி, நியமிக்கப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் மண்டலம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான பணியமர்த்தல் திட்டம் ஆகியவற்றை சிறப்பு பாதுகாப்பு குழு விரிவாக ஆய்வு செய்தது. 20-ஆம் தேதி முதல் ஜனவரி 23-ஆம் தேதி பிரதமர் வருகை வரை நான்கு நாட்களுக்கு பழைய சென்னை விமான நிலையத்தை விரிவான பாதுகாப்பின் கீழ் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஆய்வைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் விமான நிலையம் தரையிறங்கும் பகுதியை பாதுகாப்பு குழு ஆய்வு செய்வதற்காக மதுராந்தகத்திற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மத்திய பட்ஜெட் 2026: பிப்ரவரி 1-ல் தாக்கல்; நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2026 அன்று தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான என்.டி.ஏ 3.0 அரசாங்கத்தின் 3-வது முழுமையான பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது, இது சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத ஒரு அபூர்வ நிகழ்வாகும்.
ஜனவரி 28 முதல் ஏப்ரல் 2 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் 2026 பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் தாக்கலின் மூலம், மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா மற்றும் மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட முன்னாள் நிதியமைச்சர்களை விட அதிக எண்ணிக்கையிலான மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் முறியடிப்பார். இந்த அறிவிப்புகள் வரும் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதாரப் பாதையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் உரை மத்திய பட்ஜெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (indiabudget.gov.in), சன்சாத் டிவி மற்றும் தூர்தர்ஷனில் நேரலையாக ஒளிபரப்பப்படும். பல தேசிய செய்தி சேனல்களும் நேரலை ஒளிபரப்பை வழங்கும், அதே நேரத்தில் சன்சாத் டிவி, தூர்தர்ஷன் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ஆகியவை தங்களது யூடியூப் தளங்களில் நேரலை செய்வதோடு சமூக வலைதளங்களிலும் உடனுக்குடன் தகவல்களை வழங்கும்.

இவை தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் (indianexpress.com) இணையதளத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன் பகுப்பாய்வு குறித்த நேரடித் தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
புதிய வரி முறையின்கீழ் ரூ. 12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட 2025-26 பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பைத் தொடர்ந்து, வரி செலுத்துவோரிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த ஆண்டு, வரி செலுத்துவோர் மேலும் வருமான வரி சலுகைகள், எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கான இலக்கு பலன்களை எதிர்பார்க்கின்றனர்.

பட்ஜெட்டிற்கு முன்னதாக, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2024-25-ல் இருந்த 6.5 சதவீதத்தை விட அதிகமாகும். இருப்பினும், பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றப்படாத பெயரளவு ஜி.டி.பி வளர்ச்சி ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2026-27 பட்ஜெட்டில் வரி வருவாயை மதிப்பிடுவதற்கான முக்கிய காரணியாகும்.
கிசான் கிரெடிட் கார்டு (கே.சி.சி) மூலம் பெறப்படும் கடன்களுக்கான வட்டி மானியத் திட்டத்தின் கீழ் கடன் வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துதல், பருத்தி உற்பத்தித்திறனுக்கான ஒரு மிஷன் மற்றும் அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய மிஷனை அமைத்தல் ஆகியவை அடங்கும். மேம்படுத்தப்பட்ட கே.சி.சி கடனை அறிவிக்கும் போது, இந்தத் திட்டம் 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு குறுகிய காலக் கடன்களை எளிதாக்குகிறது என்றும், அதிக கடன் வரம்பு நிறுவனக் கடன்களைப் பெறுவதை மேம்படுத்தும் என்றும் சீதாராமன் கூறியிருந்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை – ஆளுனர் உரையுடன் இன்று தொடக்கம்

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றமுதல் கூட்டத்தொடர், இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்தத் தொடர், வழக்கம்போல் ஆளுநரின் உரையுடன் ஆரம்பமாகிறது.
மரபுப்படி, ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து, அதன் தமிழ உரையை சபாநாயகர் வாசிப்பார். இந்தத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆலோசனைக் குழு கூடி முடிவெடுக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய விதம் மற்றும் அவையிலிருந்து அவர் வெளிநடப்பு செய்தது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த வகையில், தற்போது ராஜ்பவன் (லோக் பவன்) மற்றும் மாநில அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால், இந்த ஆண்டு ஆளுநரின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமான சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.கே.பொன்னுசாமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஒரு நாள் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டத்தொடர் சில முக்கிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு நடைபெறுவதால் மிகுந்த கவனம் பெறுகிறது:

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இந்திய மொழிகளில் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் 4-வது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா சென்னையில் கடந்த 16-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நமது மண்ணின் சிந்தனைகளும், எழுத்துகளும் உலகம் முழுவதும் பரவ வேண்டும். இலக்கியத்துக்கு எல்லைகள் கிடையாது. திருவள்ளுவரின் அறமும், இளங்கோ அடிகளின் காப்பியமும், பாரதியின் கவிதைகளும், பாரதிதாசனின் கருத்துகளும் உலகமெல்லாம் ஒலிக்க வேண்டும்.
அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு மிகச் சிறந்த மாநிலம் தமிழகம். கீழடி முதல்பொருநை வரை கண்டெடுத்த தொல்லியல் சான்றுகள் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு எப்படிப்பட்டது என்பது புரியும். உலக நாடுகளின் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வாருங்கள்.மனிதநேயம், சமூகநீதி பேசும் திராவிடக் கருத்தியல் இலக்கியங்களை உங்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், மத்திய கலாச்சாரத் துறையின் தலையீட்டால், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. கலை இலக்கிய விருதுகளில்கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது. இப்படி ஒரு சூழலில், தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக எதிர்வினை ஆற்றவேண்டும் என்று பல்வேறு எழுத்தாளர்கள், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோர் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இது காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே இருக்கிறோம்.
அதன்படி, குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிசா, வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கப்படும். விருதுடன், தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

படைப்புகளின் இலக்கியத் தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ், சென்னை மேயர் பிரியா,தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி, கவிஞர்கள் வைரமுத்து, மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் இமயம், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன், பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி, எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசின் மொழிபெயர்ப்பு மானியம் மூலம் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 44 நூல்கள், பொது நூலகத் துறையின் 40 நூல்கள் என மொத்தம் 84 நூல்களை புத்தகத் திருவிழாவில் முதல்வர் ஸ்டாலின்வெளியிட்டார். உலகத்தரம் வாய்ந்த படைப்புகள் எளியதமிழில் கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என தமிழ்நாடு மொழிபெயர்ப்பு முகமை மூலம் பல கோடி ரூபாயை ஒதுக்கி, கடந்த 3 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Read More
இந்தியாசினிமாதமிழ்நாடு

யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை” – சர்ச்சைகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முற்றுப்புள்ளி!

வந்தே மாதரம் மற்றும் மா துஜே சலாம் பாடலை பாட மறுத்ததாக எழுந்த சர்ச்சைக்கு தனது பாணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது விளக்கத்தைத் தந்துள்ளார்.
தனது சமீபத்திய பேட்டியில் இதுபற்றி பேசியுள்ள ஏ.ஆர்.ரகுமான், இசை எப்போதும் ஒரு கலாசாரத்தை இணைப்பதற்கும், கொண்டாடுவதற்கும், கௌரவிப்பதற்கான வழியாகத்தான் இருந்துள்ளதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்
பிரதமரின் முன்னிலையில் வேவ் உச்சி மாநாட்டில் பங்கேற்றது முதல், இளம் நாகா இசைக்கலைஞர்களுடன் இணைந்து வாத்தியக் குழுவை உருவாக்கியது வரை பன்முகத்தன்மையுடன் பணியாற்றியதை எடுத்துக்கூறியுள்ளார். படைப்புச் சுதந்திரத்தை மதிக்கும் இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்விளையாட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்…

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை முதல் நாளான நேற்று (ஜன.15), அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியுடன் பாலமேடு ஜல்லிக்கட்டு ஆரம்பமானது. போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதை தொடர்ந்து முதல் சுற்று தொடங்கியது. முதல் சுற்றில் 100 காளைகளும், 50 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்களின் விவரத்தை அறிய களத்தில் டிஜிட்டல் பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சுற்றுகளாக பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வெவ்வேறு வண்ணத்திலான சீருடை (ஜெர்சி) அணிந்து பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே போட்டியில் பங்கேற்க காளைகளும், வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் விதிமுறைகளை மீறுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் பலர் பாலமேட்டில் முகாமிட்டுள்ளனர். போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. களத்தில் காயமடையும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

“பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார்.. என்.டி.ஏ. கூட்டணியில் புதிய கட்சிகள்!”

மதுரையில், என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சார மாநாடு நடக்க இருப்பதாகவும், அதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுவார் என்றும் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் ராம. ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சார மாநாடுக்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து ராம. ஸ்ரீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் மனு கொடுத்தனர். தொடர்ந்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ராம. ஸ்ரீநிவாசன் பிரதமர் மதுரை வருவதை உறுதி செய்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; “மதுரையில் என்.டி.ஏ. கூட்டணியின் பரப்புரை தொடங்க இருக்கிறது. இதனை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர இருக்கிறார். இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.
பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால், பொதுவாக பரப்புரைக் கூட்டங்களுக்கு ஒரே நேரத்தில், ஒரே மேடையில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், மதுரையும், தமிழ்நாடும் அவர்கள் இருவருக்கும் தனித்துவமான இடம் என்பதால் இருவரும் ஒன்றாக வந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்” எனத் தெரிவித்தார்.
இந்தப் பரப்புரையில், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும், அதிமுக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. இதுபோக, புதிதாக என்.டி.ஏ. கூட்டணியில் இணைவோரும் பங்கேற்பார்கள்.

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லி புறப்பட்ட விஜய்-கரூர் சம்பவம் 

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக த.வெ.க தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று (ஜனவரி 12) காலை சுமார் 11 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார். இதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இவருடன் த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் செல்வதாக கூறப்படுகிறது.

விஜய் டெல்லி வருவதையொட்டி அவருடைய ரசிகர்களும், த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் டெல்லிக்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டு விட்டனர். இதனால் சிபிஐ அலுவலகம் முன் மற்றும் விஜய் வரு பாதையில் பெரும் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லி போலீசாரால் செய்யப்பட்டுள்ளன. த.வெ.க. 2-ம் கட்ட தலைவர்களிடம் டெல்லியில் சி.பி.ஐ. 3 நாள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதுபோல விஜய்யிடமும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

Read More