அரசியல்தமிழ்நாடு

தூத்துக்குடியில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் சங்கத்தை தொடங்கி வைத்தார் கனிமொழி எம்பி..!!

தூத்துக்குடி மீன்பிடி‌ துறைமுக வளாகத்தில், தமிழ்நாடு மீன்வளம் – மீனவர் நலத்துறை சார்பில் இன்று‌ (08/11/2023) புதன்கிழமை, புதிதாக தொடங்கியுள்ள தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் சங்கத்தினை கனிமொழி எம்பி தொடங்கி‌வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் , அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா இராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.