தமிழ்நாடு

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெறும் தேசிய அளவிலான கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ட்அப் போர்டு’ போட்டிகளை துவக்கி வைத்தார் கனிமொழி எம்,பி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட, முத்துநகர் கடற்கரையில், கடல்சார் விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய கயாக்கிங் சங்கத்தின் சார்பில் இன்று (08/09/2023) வெள்ளிக்கிழமை, நடைபெறும் “தேசிய அளவிலான கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ட்அப் போர்டு” போட்டிகளை துவக்கி வைத்தார் கனிமொழி கருணாநிதி எம்பி .இந்நிகழ்வில் உடன் தமிழ்நாடு ஸ்டாண்ட்-அப் துடுப்பு தலைவர் சதீஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட, சிவந்தாகுளம் அரசு நடுநிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டத்தினை துவக்கி வைத்து, மேலூர் மாநகராட்சி பள்ளியில் மாவட்ட கனிமவள நிதியில் இருந்து ரூபாய் 60 லட்சம் மற்றும் என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதியில் இருந்து ரூபாய் 225 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட இருக்கும் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் கனிமொழி எம்பி

இந்நிகழ்வில் உடன் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆட்சியர் கௌரவ் குமார், மாநகராட்சி ஆணையர்தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்