தமிழ்நாடு

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத் தாலி கண்டெடுப்பு

சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெறும் 2ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்கத் தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலாம் கட்ட அகழாய்வில் 3,254 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பொருள்கள் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதே இடத்தில் இரண்டாம் கட்ட ஆல ஆய்வு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி துவங்கி இதுவரை 16- குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் சங்கு வளையல்கள்,புகை பிடிப்பான் கருவி, சுடுமண்ணாலான பானை, பாசிமணிகள் உள்ளிட்ட 3,200-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்து.

Image

இந்நிலையில் தற்போது 40- விழுக்காடு மட்டும் தங்கம் கலக்கப்பட்ட தங்க தாலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கத் தாலி 56 மில்லி கிராம் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 40 விழுக்காடு மட்டும் தங்கம் கலக்கப்பட்ட தாலியை முன்னோர்கள் பயன்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பொழுதில் வாழ்ந்த முன்னோர்கள் தங்கத்தால் ஆன பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.