தமிழ்நாடு

மணிப்பூர் சம்பவம் – சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம்

மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை தடுக்கத்தவறிய இந்திய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பட்டம் அறிவித்துள்ளனர்.

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி, நாட்டையே உலுக்கியது.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை தடுக்கத்தவறிய இந்திய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பட்டம் அறிவித்துள்ளனர். அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.