12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை உயர்த்தி வழங்குகிறது தமிழ்நாடு அரசு – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ட்வீட்
12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை உயர்த்தி வழங்குகிறது தமிழ்நாடு அரசு என்று அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதியோர் மாத உதவி தொகை ரூபாய் 1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் காலை 10:30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடியது.

இதில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் , அமலாக்கத்துறை சோதனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சரவை கூட்டத்தில் மிக முக்கியமான ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் ஆதரவற்ற கைம்பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவி தொகை 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் இந்த உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், 12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை உயர்த்தி வழங்குகிறது தமிழ்நாடு அரசு! மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான #திராவிட_மாடல் அரசுக்கு நன்றி !
முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து இனி ரூ.1200 ஆக உயர்த்தி வழங்கப்படும் சொல்லாததையும் செய்யும் ஆற்றல்மிகு அன்புத் தலைவர் நம் #முதலமைச்சர் #திராவிட_நாயகன் என்று பதிவிட்டுள்ளார்.
