அரசியல்தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கனிமொழி எம்பி..!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (01/04/2023) சனிக்கிழமை, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி கலந்துகொண்டு, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளிகளுக்கான திறன்பேசி, மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி, காதொலி கருவி, மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் தீண்டாமை கடைபிடிக்காமல் நல்லிணக்கத்தோடு வாழும் 4 கிராமங்களுக்கு ரூ.10 இலட்சத்திற்கான காசோலை என மொத்தம் 891 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் ஆட்சியர் சுபம் தாக்கரே, ஆட்சியர் கௌரவ் குமார், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாற்றுத் திறனாளி நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.