100 யூனிட் இலவச மின்சாரம் தடைபடாது – அமைச்சர் செந்தில் பாலாஜி
100 யூனிட் இலவச மின்சாரம் தடை செய்யப்படும் என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை எதற்காகவும் 100 யூனிட் இலவச மின்சாரம் தடைபடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் .
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது :
ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்ற எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை
ஒருவர் எத்தனை மின் இணைப்புகளை பெற்றிருந்தாலும், அவை ஒவ்வொன்றிற்கும் தலா 100 யூனிட் இலவச மின்சாரம் தடைபடாது
வீடுகள், விசைத்தறிக்களுக்கான இலவச மின்சாரம் மற்றும் மானியங்களில், தற்போது உள்ள நிலையே
தொடரும்
கோடைகாலத்தில் கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்தை மாற்று ஏற்பாடு மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்
