தமிழ்நாடு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளிடம் வனத்துறையினர் பிரிவிற்கு 10 ரூபாயும், சிறுவர்களுக்கு ஐந்து ரூபாயும் வீதம் வசூலிக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மதுராந்தகம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர்.