இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச முடிவு
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவதாக டி20 தொடர் நடைபெற்ற நிலையில் இதில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
டி20 போட்டி தொடரைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது. ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுகிறது .
இப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கியுள்ளனர் .
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க விடும்
