IND VS SL முதல் டி20 போட்டி : டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச முடிவு
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது .
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவாதாக டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டி வருகிற 03, 05, 07 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பையில் இலங்கை அணி இந்திய அணியை வீழ்த்தி இருந்தது. ஆகையால் இந்த தொடரில் இந்திய அணி இலங்கைக்கு தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கியது . இதில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது . இதையடுத்து இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் விளையாடி வருகின்றனர் .
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
