உலகம்

பிலிப்பைன்ஸை பந்தாடிய கனமழை..!

பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி உள்ளது. இடைவிடாது கொட்டிய மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாகி காட்சி தருகின்றன.

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பனிரெண்டு வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

கனமழை, வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கனமழை, வெள்ளத்துக்கு ஆறு பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பத்தொன்பது பேர் மாயமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களை தேடும் பணியில் மீட்ப்புக் குழு ஈடுபட்டு உள்ளது.