அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது. தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பு வெளியாகும். அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு விரைவில் கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது. ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை பாதிக்கிறது. தற்கொலைக்கு காரணமாக உள்ளது. அதனை உடனடியாக தடை செய்ய வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். பூஜ்ஜியம் மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தட்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.
காவி என்பது எந்த கட்சிக்கும் சொந்தம் இல்லை. யாரெல்லாம் சமூகத்தை நேசிக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் காவி சொந்தம். பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். அவர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எப்படி செயல்பட்டார் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய சூழலை விட்டு விடுங்கள். அடுத்த 10 ஆண்டுகளில் இங்கு இருக்கும் அரசியலை பற்றி சிந்திக்க வேண்டும். திமுகவை பொறுத்தவரை குடும்ப ஆட்சி தான் நடைபெறுகிறது. முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் முதலமைச்சர்களாக வேலை பார்க்கின்றனர். திமுகவை பொறுத்தவரை குடும்ப ஆட்சிதான் நடைபெறுகிறது. அரசியலில் அதர்ம வழியில் சென்றால் கடைசியில் பூஜ்ஜியம்தான். சிறுபான்மையின மாணவருக்கான கல்வி உதவித் தொகை வேறொரு திட்டத்தின் பெயரில் வழங்கப்படுகிறது. மழை, வெள்ள பாதிப்பு விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யாது.” எனக் கூறினார்.
