உலகம்

சார்லஸ் , கமீலா மீது முட்டை வீச்சு!! பரபரக்கும் பிரிட்டன்!!

இங்கிலாந்தின் ராணியாக தொடர்ந்து 70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர் ராணி எலிசபெத். இவர் சமீபத்தில் வயது மூப்பு காரணமாக செப்டம்பரில் உயிரிழந்தார். இவருக்கு பின் இவரது மூத்த மகன் சார்லஸ் அந்நாட்டின் மன்னராகவும், அவரது கமீலா சார்லஸ் ராணியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக மன்னராக பொறுப்பேற்றுக் கொண்ட சார்லஸ் அவரது மனைவி ராணி கமிலாவுடன் இன்று அந்நாட்டின் யார்க்‌ஷெரி மாகாணத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டனர். அம்மாகாணத்தின் மிக்லிகெட் பார் பகுதியில் சார்லஸ் – கமிலா வந்திருந்தபோது அவர்களை வரவேற்க அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.

அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் சார்லஸ் – கமிலா மீது முட்டையை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த முட்டை வீச்சு தாக்குதலில் முட்டை சார்லஸ் மீது விழாமல் தரையில் விழுந்தது. முட்டை வீசியபோது அந்த நபர் ‘அடிமைகளின் ரத்தத்தால் இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது’ எனக் கோஷமிட்டார்.

இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பிற்காக வந்திருந்த போலீசார் அரசரையும், ராணியை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து முட்டை வீசி தாக்குதல் நடத்திய 23 வயதான கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். அரசர் சார்லஸ் – ராணி கமிலா மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.