அரசியல்தமிழ்நாடு

பிற மொழியை கற்க வலியுறுத்த யாருக்கும் உரிமை கிடையாது- கனிமொழி எம்பி

கோவை தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பிற மொழியை கற்க வலியுறுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. மொழி என்பது நம்முடைய அடையாளம் நம்மை பற்றியும் , நம் வரலாற்றை தெரிந்துக்கொள்ள உதவுகிறது. நம்முடைய தகவல் தொடர்பிற்கான மொழி மட்டுமல்ல இது அடையாளம், சுயமரியாதை என தெரிவித்தார். மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது என்று தான் முதல்வர் அறிக்கை வெளியிடுள்ளார்.

தமிழ் , ஆங்கிலம் இரண்டு மொழிகள் இருக்ககூடிய சூழல் தான் தமிழகத்தில் உள்ளது. உலகத்தின் தொடர்புகொள்ள ஆங்கிலம் , நம்முடன் பேசுவதற்கு தமிழ் இருக்கிறது. மொழிப் போர் குறித்து ஒரு கதவு போதுமானது என அண்ணா அன்றே கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைபாடு. இந்தியாவை பொறுத்தவரை schedule 8 ல் மொழிகள் எல்லாம் இணையாக, ஒரே நிலையில் பார்க்க வேண்டும்.

சில மொழிகள் , அலுவல் மொழிகளை கொண்டு வர நினைக்கிறார்கள். ஆனால் அதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய முதல்வர் மட்டுமின்றி, மற்ற மாநில முதல்வர்கள் கூட எதிர்வினை ஆற்றி உள்ளார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.தமிழிசை செளந்தரராஜன் பெண்கள் ஆடை அணிவது குறித்த கருத்திற்கு தந்தை பெரியார் குறிப்பிட்டது போல பெண் தனக்கு எது வசதியான உடையோ அலங்காரமோ அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அதை பெரியார் வலியுறுத்தியுள்ளார். கட்டுபாடு என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.