தூத்துக்குடியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்..!
அரசு பள்ளிக் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தூத்துக்குடி, டூவிபுரம், மாநகராட்சி துவக்கப் பள்ளியில் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர். உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடியில் உள்ள 8 துவக்கப் பள்ளிகளுக்கான தொடக்கு விழா டூவிபுரம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உடன் கலந்து கொண்டார்.
பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து காலை சாப்பிட்டனர்.

