அரசியல்தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்பி..

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள், காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் மற்றும் ஓட்டப்பிடாரம் வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையங்கள், நியாய விலைக் கடைகள், இயற்கை உரம் தயாரிக்கும் கூடம், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தருவைகுளம் பகுதி உள்ள உரக்கிடங்கு, மாப்பிள்ளையூரணியில் உள்ள நர்சரி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார் கனிமொழி எம்பி.

இந்த ஆய்வின் போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்