போதை பொருள் வழக்கில் கைதான பாலிவுட் கிங் ஷாருக் கான் மகனுக்கு வந்த அதிரடி தீர்ப்பு..!
இந்திய தரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும் பாலிவுட் திரையுலகின் பாஷாவாகவும் வலம் வருபவர் நடிகர் ஷாருக் கான் . இவரது செல்ல மகன் ஆர்யன் கான் கடந்த வருடம் அக்டோபரில் சொகுசு கப்பலில் போதை பொருள் வைத்திருந்ததாக போதை தடுப்பு பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் .
நீண்ட நாட்கள் சிறையில் இருந்து சில மாதங்களுக்கு பின் ஆர்யன் கான் ஜாமினில் வெளிவந்தார். அதற்கு முன்பு அவரது ஜாமீன் மனு பல முறை அவரது ஜாமீன் நிகரிக்கப்பட்டது .
பல முன்னணி வக்கீல்களின் விடாமல் செய்த முயற்சிகளால் பெரிய போராட்டத்திற்குப் பிறகு தான் ஷாருக் கான் தனது செல்ல மகனை ஜாமீனில் எடுத்தார்.
இந்நிலையில் தற்போது Narcotics Control Bureau இந்த வழக்கின் சார்ஜ் ஷீட்டை பைல் செய்திருக்கிறது. அதில் ஆர்யன் கான் மற்றும் மேலும் ஐந்து பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இந்த ஆறு பேர் மீது சுமத்த பட்ட குற்றங்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதனால் மீதம் உள்ள 20 பேர் மீது மட்டும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது .
நாட்டை உலுக்கிய இந்த போதை வழக்கில் சிக்கிய ஷாருக்கான் மகன் சில நாட்கள் மட்டும் சிறையில் இருந்துவிட்டு பணபலத்தால் அவரை ஜாமினில் எடுத்து பின்னர் அவர் மேல் எந்த குற்றமும் இல்லை என தற்போது தீர்ப்பு வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்த வருகின்றனர் .
