இசையமைப்பாளர் அனிருத்துக்கு விரைவில் திருமணம்..! மணப்பெண் யார் தெரியுமா..?
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இசையமைப்பாளர்களில் உச்சத்தின் உச்சியில் ராக் ஸ்டார் இசையமைப்பாளராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அனிருத் ரவிசந்தர்.
தமிழ் திரையுலகில் தனுஷின் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது அஜித், விஜய், கமல், ரஜினி என அனைத்து ஜாம்பவங்களின் படங்களில் இசையமைத்து வருகிறார் .
இன்றைய ட்ரெண்டிற்கேற்ப தாறுமாறான இசை அமைத்து இந்திய திரையுலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்கும் நம்ப ராக் ஸ்டாருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக பல வதந்திகள் இணையத்தில் உலா வந்தன.

ஆனால், அப்படி எதுவும் இல்லை அந்த செய்தி போலி என்று தற்போது தெரியவந்துள்ளது. ஆனால், இசையமைப்பாளர் அனிருத்தின் திருமண வேலை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் மணப்பெண் திரைத்துறையை சேர்ந்தவர் இல்லை என்றும் விரைவில் இதுகுறித்து அனிருத் நல்ல செய்து கூறுவார் என்றும் நம்பத்தகுந்த வற்றங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது .
