ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால்..! எலான் மஸ்க் போட்ட பரபரப்பு ட்வீட்…
ஒரு வேளை நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால் என்று மர்மமான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் உலக பணக்காரர் எலன் மஸ்க். இவரின் அந்த ட்வீட் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ்., டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க், தற்போது ட்விட்டர் நிறுவனத்தையும் அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.
முதலில் ட்விட்டரின் சுமார் 9.2 சதவீத பங்குகளைக் மட்டுமே வாங்கியிருந்த எலன் , பின்னர் ட்விட்டர் நிறுவனத்தையே அதிக விலை குடுத்து வாங்கி விட்டார்.
அவரது கைக்கு ட்விட்டர் வந்த நாள் முதல் வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் எதையாவது ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் எலான் மஸ்க், தற்போது ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதற்றத்தை ஏற்படும் பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எலான் மஸ்க் போட்ட டீவீட்டுக்கும் உக்ரைன் , ரஷ்யா போருக்கும் நிச்சம் சம்மந்தம் உள்ளது என்று சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது . ஏனென்றால் ரஸ்யாவின் தொடர் தாக்குதலால் பெரும் இழப்பை சந்தித்துள்ள உக்ரைன் எலான் மஸ்கிடம் உதவி கோரியது .
உக்ரைன் அரசின் கோரிக்கையை ஏற்று எலான் மஸ்க்கும் மறைமுகமாக உதவியதாக கூறப்படுகிறது . இதனால் எலான் மேல் ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளதாகவும் அவருக்கு ரஷ்யா எச்சரிக்கையும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த எச்சரிக்கை காரணமாகவே எலான் மஸ்க், மர்மமான முறையில் இறந்துவிடலாம் என ட்வீட் செய்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது .
