டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பம்!
அரசு காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் அந்தவகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டம் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. அதன்படி குரூப்-4 தேர்வானது வருகிற ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காலி பணியிடங்கள் ஆக 7383 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் வீட்டு வசதி வாரியங்கள் உள்ள 163 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது என்பது பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவில் மூலம் நிரப்பப்படும் என்றும், இத்தேர்வு காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மூன்று மணி நேரம் நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். இதில் 100 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாகவும் , 75 கேள்விகள் பொது அறிவு தொடர்பானதாகவும் இருக்கும். குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்றும், நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கு நேற்று மாலை வரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வருகிற 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
