சினிமா

தளபதி 66 குறித்து இயக்குனர் வம்சி கொடுத்த செம அப்டேட்..!

உலகமெங்கும் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், திரை அரங்குகளில் மக்கள் கூட்டம் குறைய துவங்கி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

மக்கள் கொடுத்த நெகடிவ் விமர்சனங்கள் பலரை திரை அரங்குக்கு பீஸ்ட் பார்க்க வர அச்சம் ஊட்டியது. என்ன தான் விஜய் அசத்தலாக நடித்து, நடனம் ஆடி இருந்தாலும், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்றே சொல்லலாம்.

இதற்கிடையில் விஜய் தமது அடுத்த படத்தில் நடிக்க தயார் ஆகி விட்டார். வம்சி இயக்கும் படத்துக்கு தமன் இசை அமைகிறார். தளபதி 66 குறித்து வம்சி யிடம் வைக்கப்பட்ட கேள்விக்கு படத்தை பற்றி இப்போது கூற முடியாது, ஆனால் கட்டாயம் விஜய் ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாகவும் நடிகன் விஜயின் படங்களில் இந்த படம் முக்கியப படமாக மாறும் என கூறியுள்ளார்.