தூத்துக்குடி : மீனாட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடத்தை இன்று திறந்து வைத்தார் கனிமொழி எம்பி…
தூத்துக்குடி மாவட்டம், மீனாட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 35.47 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை மற்றும் உணவுக்கூட கட்டிடத்தை பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார் கனிமொழி எம்பி

இந்நிகழ்வில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் கொம்பையா, சுப்பிரமணியன், ஜெயக்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா ஞானலதா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
