பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச முடிவு..!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 16-வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன .
இதில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா பந்துவீச முடிவு செய்துள்ளார். இதையடுத்து குஜராத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரக்கல் களத்தில் உள்ளனர்.
ஐ.பி.எல். தொடரில் புதிய அணியாக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் அட்டகாச வெற்றி பெற்று, தற்போது ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் பஞ்சாபை இன்று சந்திக்கிறது .
முதல் லீக்கில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் அணி, 2-வது லீக்கில் டெல்லியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த பக்கம் தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக 206 ரன்கள் இலக்கை அசால்ட்டாக சேஸ் செய்து அசத்திய பஞ்சாப் அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் 137 ரன்னில் சுருண்டது. அதன் பிறகு அடுத்த ஆட்டத்தில் சென்னையை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பார்முக்கு வந்தது .
இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கிடையே நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
