டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு..!
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராகுல் தலைமையிலான லக்னோ அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் உள்ளனர்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய அணியாக களமிறங்கியுள்ள கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இதுவரை 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது.
இந்த பக்கம் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலா ஒரு வெற்றி தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் DY Patil மைதானத்தில் இன்று நடக்கும் இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
