தமிழ்நாடு

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா..! கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது..

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடியேற்றம், திருக்கல்யாணம், திக் விஜயம் உள்ளிட்ட விழாக்கள் பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெற்றது.

மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் பக்தர்களின் அனுமதியோடு இன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, தங்கக் கொடி மரத்தில் உற்சவக் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சித்திரை திருவிழாவையொட்டி வரும் 12ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 13ம் தேதி திக் விஜயமும், 14ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 15ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும், ஏப்ரல் 15ம் தேதி மாலை கள்ளழகர் எதிர்சேவையும், ஏப்ரல் 16ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவை காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.