விளையாட்டு

லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு..!

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது லீக் போட்டி DY Patil மைதானத்தில் இன்று நடைபெறுகிறது . இந்த ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஒரு போட்டியில் மட்டும் விளையாடியுள்ள ஐதராபாத் அணி அந்த போட்டியின் தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் நிற்கிறது . லக்னோ அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வி என புள்ளி பட்டியலில் 6-வது இடம் வைக்கிறது .

இதில் இன்று லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஐதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் முதல் வெற்றியை பதிவு செய்ய ஐதராபாத் அணியும் வெற்றி பாதையை தொடர லக்னோ அணியும் இன்று கட்டாயம் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இருப்பினும் இன்று நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.