பீஸ்ட் பட பாடல்கள் குறித்து வெளியான அட்டகாச தகவல்..!
கலாநிதி மாறன் வழங்கும் பீஸ்ட் திரைப்படம் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் 13 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது.
முதல் பார்வை முதல் இரு தினங்களுக்கு முன்பு வெளியான டிரெய்லர் வரை எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது எனலாம். பல கலவையான விமர்சனங்களை பீஸ்ட் பெற்றுள்ள நிலையில், தற்போது இரண்டு பாடல்கள் எங்கே வர போகிறது என ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
நமக்கு கிடைத்துள்ளது அந்த பிரத்யேக தகவல். அரபிக் குத்து பாடல் விஜய், பூஜா ஹெக்டே முதல் சந்திப்பில் வரும் என்றும், ஜாலி ஓ ஜிமக்கான பாடல் பட இறுதி டைடல் கார்டில் வரும் என்றும், பின்னனி இசையோடு சண்டை காட்சிகளில் அடிக்கடி ஒரு பாடல் வரும் என்றும் உறுதி ஆகி உள்ளது.
