பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு..!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 8-வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் 2 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி முதல் போட்டியில் வெற்றியும் ,இரண்டாவது போட்டியில் தோல்வியையும் பெற்றது .
பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியில் பெங்களூரு அணியை அசால்ட்டாக வீழ்த்தியது .
இதில் இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச முடிவு செய்துள்ளார் . இதையடுத்து கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தோல்வியிலிருந்து மீண்டும் வர கொல்கத்தா அணியும் ,வெற்றியை தக்க வைக்க பஞ்சாப் அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது .
