தமிழ்நாடு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது, முதல் மிதமான மழை பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.