தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: வெற்றி பெறுமா இந்தியா அணி..?
இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது .
3 போட்டிகள் கொண்ட தொடரின், முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செய்த தவறால் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது .
இந்நிலையில் தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி தற்போது களத்தில் பேட்டிங் செய்து வருகிறது .
முந்தைய ஆட்டத்தில் இந்திய அணியின் மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர். இதனால் இன்றைய ஆட்டத்தில் தவறுகளை சரிசெய்து, வெற்றி பெறும் முனைப்பில் களத்தில் தற்போது கேப்டன் ராகுல் மற்றும் பண்ட் களத்தில் விளையாடி வருகின்றனர் .
இந்நிலையில் இன்று நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்தான் பார்க்க வேண்டும் .
