இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சதி திட்டம்..! உஷார் நிலையில் பாதுகாப்பு படைகள்…
சீனாவிடமிருந்து, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இதை பயன்படுத்தி இந்திய பகுதிக்குள் ஆயுதங்கள், வெடி பொருட்கள் வீசுவதற்கு பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியுள்ளது.
இது பற்றி அறிந்த உளவுத்துறையினர், எல்லை பாதுகாப்பு படையினரை எச்சரித்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் பறக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் அபுதாபியில் நடந்த ட்ரோன் தாக்குதலுக்குப் பின், இந்த விஷயத்தில் பாதுகாப்பு படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
