Covid19இந்தியாவிளையாட்டு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கங்குலியின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பி.சி.சி.ஐ. தலைவருமான கங்குலிக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கங்குலியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் நேற்று (டிசம்பர் 27) மாலை முறையான சிகிச்சைக்காக உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

கங்குலிக்கு தற்போது (Monoclonal antibody cocktail therapy) எனப்படும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தாலும், தீவிர பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அனுபவமிக்க மருத்துவ குழுவினர் மூலம் கங்குலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது 49 வயதாகும் கங்குலி, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.