தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய கனிமொழி எம்பி..!
தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு அருகில் உள்ள நேசமணி நகரில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் முத்துலட்சுமி என்பவரின் குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து பாதிப்புக்குள்ளாக்கியது .
இதனையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் கனிமொழி எம்பி .
இந்நிகழ்வின் போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான திருமிகு.கீதா ஜீவன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
