படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள்..! அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்..
வேதாரண்யத்தில் தனியார் பேருந்து ஒன்றில் அதிக அளவிலான ஆட்களை ஏற்றிச்சென்ற நிலையில், மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக காரில் வந்த ஆட்சியர் அருண் தம்புராஜ் இதனை புகைப்படம் எடுத்து போக்குவரத்து ஆய்வாளருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் புத்தூர் பகுதியில் வந்துகொண்டிருந்த பேருந்தை அதிரடியாக மடக்கி பிடித்து போக்குவரத்து ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.
