சினிமா

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் வெந்து தணிந்த காடு படத்திலிருந்து வெளியான அட்டகாச அப்டேட்…

ரொமான்டிக் இயக்குனர் கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக சிலம்பரசன் இணைந்துள்ளார், மேலும் இப்படத்திற்கு ‘வெந்து தணிந்த காடு’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி, சென்னை மற்றும் மும்பையில் பல ஷெட்யூல்களை படக்குழு முடித்துள்ளது. தற்போது, ​​’வெந்து தணிந்த காடு’ இறுதி ஷெட்யூல் சென்னையில் நடத்த முடியாத காரணத்தால் படக்குழு மும்பைக்கு பறந்து உள்ளது .

இந்த படப்பிடிப்புடன் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து அடுத்த வருடம் கோடை விடுமுறையின்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சிம்புவின் ’மாநாடு’ திரைப்படம் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.