திரைப்படத்துறை குறித்து தேவையற்ற கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக்களை பாஜகவினர் முற்றிலும் தவிர்க்க வேண்டும் எப்போது எதற்காக பேச வேண்டுமோ, அப்போது அதற்காக பேச வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவியல் கூறிருப்பதாவது :
திரைப்படங்கள் குறித்து கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்போரின் கருத்துக்கள் பாஜகவின் கருத்தாக மாறிவிடுவதால் கவனம் தேவை
திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநர்களின் கற்பனையின் வெளிப்பாடுதான் ஆனால் பாஜகவினர் சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர் இது வேதனை அளிக்கிறது.
மாநாடு படம் பற்றி பாஜகவின் வேலூர் இப்ராஹிம் கருத்து தெரிவித்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
