சினிமாதமிழ்நாடு

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி..! சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே போட்ட ட்வீட்…

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் பரவிய நிலையில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தொற்று குறைந்து வருகிறது. இதற்கிடையே தடுப்பூசி போடும் பணியும் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் 116 கோடிக்கும் மேலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிங்கர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது :

‘அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.