ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 152-வது பிறந்தநாள் : தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள ராவ்பகதூர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கனிமொழி எம்பி..!
இன்று திங்கள்கிழமை, தூத்துக்குடி மக்களின் தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 152-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி
இந்நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கீதா ஜீவன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்!
