அரசியல்தமிழ்நாடு

அதிகாரிகளின் அலட்சியத்தால் உச்சக்கட்ட கோபத்தை வெளிப்படுத்திய அமைச்சர் மனோதங்கராஜ்..! இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ இதோ..!

குமரி மாவட்டத்தில் கன மழை பெய்து பல்வேறு இடங்கள் வெள்ள காடானது, இந்நிலையில் நேற்று காலை முதலே பல்வேறு இடங்களை நேரில் ஆய்வு செய்து வருகிறார் அமைச்சர் மனோதங்கராஜ் ஆய்வு செய்வது மட்டுமில்லாமல் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணிகளை செய்து கொடுக்கும்படி உத்தரவும் அளித்து வந்தார். இதனால் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளை முடித்து விட்டு வைக்கலூர் பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை கலிங்கராஜபுரத்தில் தங்க வைக்கப்படுள்ளனர் என்பதை அறிந்து அங்கு சென்ற அமைச்சருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

காலையில் அங்கு தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு மின்சார வசதி, பெட்ஷீட், தலையணை என்று எதுவும் அளிக்கப்படாததால் உச்சக்கட்ட கோபமடைந்த அமைச்சர் அதிகாரிகளை லெப்ட் ரைட் என்று வாங்கினார்.

ஏன் இதுவரை மின்சார வசதி செய்து கொடுக்கவில்லை? அத்தனை பெண்களும் இருட்டில் இருக்கின்றனர்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார், மேலும் பெட்ஷீட் போர்வை எங்கே? உணவு எங்கே? எப்போது உணவு வரும்? உணவு எங்கே இருந்து வருகிறது? என்று துருவி துருவி அதிகாரிகளை கேள்வி கேட்டார். இதனால் ஆடி போன அதிகாரிகள் உடனடியாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் அதிகாரிகள் உறுதி அளித்தும் அங்கு இருந்து செல்லாத அமைச்சர் மனோதங்கராஜ், உணவு, பெட்ஷீட், போர்வை, தலையணை, முக்கியமாக மின்சார வசதி என்று அனைத்தும் ஏற்படுத்தப்பட்டது என்பதை களத்தில் நின்று உறுதி செய்து விட்டு, அதன் பின்னர் மக்களிடம் சென்று பேசிய அமைச்சர் , வைக்கலூர் பகுதியில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படாதவாறு நிரந்தர தீர்வு ஏற்படுத்தபடும் என்று உறுதியளித்தார்.

அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்தனர். எவ்வளவு கேட்டும் அதிகாரிகள் தங்களை கண்டுகொள்ளாமல் இருந்தனர் என்று கூறி வேதனையடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையில் இருந்து அமைச்சர் பேசி உடனடியாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

சில அதிகாரிகளின் அலட்சிய போக்கு மக்களை பாதிப்படைய செய்வது மட்டுமல்லாமல், ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடுகிறது. அமைச்சர் மனோதங்கராஜின் இந்த அதிரடி நடவடிக்கை காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.