தூத்துக்குடி மாவட்டம், புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார் கனிமொழி எம்பி..!
தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்கு உட்பட்ட புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், புறையூர் வெல்ஃபேர் ட்ரஸ்ட் மற்றும் அதன் புரவலர்கள் சார்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி

இந்த நிகழ்வில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஆழ்வை ஒன்றிய பெருந்தலைவர் ஜனகர், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், திமுக மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், ஒன்றிய செயலாளர் நவீன்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, புறையூர் வெல்ஃபேர் ட்ரஸ்ட் அரங்காவலர் மர்சூக் மற்றும் திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்
