அரசியல்தமிழ்நாடு

“அதிமுக கரை கொண்ட வேஷ்டிதான் சாகும் போதும் என் உடலில் இருக்கும்” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

என் உயிரிலும் மேலாக கருதும் அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும், அதனை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

கட்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகள் கொடுக்க வேண்டும் என்றார்.

என் உயிர் மூச்சு உள்ளவரை கட்சிக்காக உழைப்பேன் என்றும் அதிமுக கரை கொண்ட வேஷ்டிதான் சாகும் போதும் என் உடலில் இருக்கும் என உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.