வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்தநாள் விழா..! தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலைக் கல்லூரியில் மினி மாரத்தான் போட்டியை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கிய கனிமொழி எம்.பி
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாளை நினைவுகூரும் பொருட்டு , இன்று தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலைக் கல்லூரியில் மினி மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார் கழக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி .

இதனையடுத்து, வ.உ.சி.கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கினார்.

இந்த நிகழ்வில் , சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன் எம்எல்ஏ, வ.உ.சி.கல்லூரி முதல்வர் வீரபாகு, உடற்கல்வி இயக்குனர் சிவஞானம், வ.உ.சி.கல்வி கழக செயலாளர் சொக்கலிங்கம், A.P.C.V.சண்முகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்

