அரசியல்தமிழ்நாடு

உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :

வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்

கடந்த 300 நாட்களாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உ.பி வன்முறை அரங்கேறியுள்ளது

இந்த ஈவிரக்கமற்ற வன்முறை சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்