அரசியல்இந்தியா

தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் பள்ளிகள் திறக்கப்படும் – கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு சொட்டு மருந்து தயாரிக்கும் முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் தீவிரமாக உள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பள்ளிகள் திறப்பு தொடர்பாக நான் ஏற்கனவே முதலமைச்சருடன் பேசியுள்ளேன். இதுதொடர்பாக விரைவில் கல்வித்துறை அறிவிப்பு வெளியிடும்.

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழக பாடத்திட்டம்தான் புதுவையிலும் பின்பற்றப்படுகிறது. எனவே தமிழகத்தின் முடிவுகளை நாமும் பின்பற்றவேண்டிய நிலையில் உள்ளோம்.

குழந்தைகளுக்கு கொரோனாவின் தாக்கமும் குறைவாகத்தான் உள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு சொட்டு மருந்து தயாரிக்கும் முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் தீவிரமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.