தமிழகம் முழுவதும் 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது..! அதிரடி காட்டிய டிஜிபி சைலேந்திரபாபு..!
தமிழகம் முழுவதும் பழிக்குப்பழி கொலைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக கூலிப்படைகள் மூலமாக தலையை துண்டித்து கொடூரமாக கொலைகள் நடந்து வருகிறது.
திண்டுக்கல்லில் சமீபத்தில் பெண் தலை துண்டித்து பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் சென்னை உள்பட மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும் ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து 934 ஆயுதங்கள், 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 734 பேர் சிறையில் அடைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
