அரசியல்தமிழ்நாடு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் – மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களை நியமனம் செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் – வே.அமுதவல்லி, செங்கல்பட்டு – சம்பத், விழுப்புரம் – டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, கள்ளக்குறிச்சி – கே.விவேகானந்தன், வேலூர் – விஜயராஜ்குமார், ராணிப்பேட்டை – மதுமதி, திருப்பத்தூர் – காமராஜ், திருநெல்வேலி – ஜெயகாந்தன், தென்காசி – முனைவர் பொ.சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.