கமலாலயத்தில் டிஜிட்டல் தொடுதிரைத் தொலைக்காட்சியை திறந்து வைத்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை..!
கமலாலயத்தில் டிஜிட்டல் தொடுதிரைத் தொலைக்காட்சியை திறந்து வைத்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
தமிழ் இனத்தின் மீது தனிப்பட்ட பற்று கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி; குஜராத்தில் பிறந்திருந்தாலும் தமிழ் மொழியை சரித்திர நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டியுள்ளார்.
மிக பெரிய அளவில் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழகம் பயனடைந்துள்ளது; 2.3 கோடி பேருக்கு இன்று ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தி நமது சாதனையை நாமே முறியடித்துள்ளோம் என தெரிவித்தார்
